இந்தியா

பாஜக அலுவலகத்தில் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

வாரணாசியில் உள்ள பாஜக அலு வலகத்தில் தேர்தல் ஆணைய அதி காரிகள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில் டீ-சர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி, ஆம் ஆத்மி ஒருங்கி ணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதியில் சனிக் கிழமை மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. திங்கள்கிழமை வாக் குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள பாஜக அலு வலகத்தில் இருந்து வாக்காளர் களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப் படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது டீ-ஷர்ட்கள், பேட்ஜுகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

தேர்தல் ஆணையத்தின் சோதனைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதி காரிகள் கைப்பற்றிய பொருள்கள் அலுவலகத்தின் கிட்டங்கியில் மீதமாக இருந்தவை, அவை வாக்காளர்களுக்கு விநியோகிக் கப்படவில்லை என்று அந்தக் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

“கடந்த மே 8-ம் தேதி வாரணாசியில் மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித் தது. அதேநேரம் ராகுல் காந்தி யின் பிரச்சாரத்துக்கு ஆணையம் அனுமதி அளித்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர்” என்று பாஜக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

வழக்கை கைவிட முடிவு

இந்நிலையில் பாஜக அலுவல கம் சோதனை தொடர்பான வழக்கை கைவிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.

SCROLL FOR NEXT