இந்தியா

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

செய்திப்பிரிவு

பாஜகவின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் பெங்களூருவில் இன்று காலை தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் இந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை பாஜகவை மேலும் பலப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த செயற்குழுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக கேரளா, தமிழகம், மேற்குவங்கம், அசாம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுதவிர நிலச் சட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT