இந்தியா

நேதாஜி ரகசிய ஆவணங்களை மறு ஆய்வு செய்ய குழு நியமனம்

பிடிஐ

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாயமானது குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ள நிலையில், உண்மையை கண்டறிவதற்கான மறுஆய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உறவினர் சூர்ய பிரகாஷ்போஸ் பெர்லினில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, நேதாஜி சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், நேதாஜி குறித்த ரகசியங்களை அறிய மறுஆய்வு குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்த குழு நாளை (வியாழக்கிழமை) கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்து உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை செயலாளர் தலைமையில் இந்த குழு செயல்பட உள்ளது. இந்தக் குழுவில் உளவுதுறை, உள்துறை மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி குடும்பத்தாரை முன்னாள் பிரதமர் நேரு அரசு சுமார் 20 ஆண்டு காலத்துக்கு வேவுபார்த்ததாக தொடர்பான ஆவணங்கள் கடந்த வாரம் கசிந்தன. இதனை அடுத்து பிரதமர் மோடியை நேதாஜி உறவினர்கள் சந்தித்து இது தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT