இந்தியா

நாட்டிலேயே முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகத்தில் தொடங்கியது

செய்திப்பிரிவு

நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடகத்தில் சாதிவாரி கணக் கெடுப்பு நேற்று தொடங்கிய‌து. இது ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறும்.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது கடந்த 1931-ம் ஆண்டு நாடு முழுவதும் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடு தலை அடைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வில்லை. இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக கர்நாடகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

இதற்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி களும் பல்வேறு கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துத்துவா அமைப்புகளும், மடாதிபதிகளும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அரசின் முடிவில் தலையிட முடி யாது” என நீதிமன்றம் கூறியது. இதையடுத்து சாதிவாரி கணக் கெடுப்பு திட்டத்துக்காக ரூ.279 கோடி ஒதுக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

பொதுமக்கள் ஆர்வம்

இந்நிலையில் 84 ஆண்டு களுக்கு பிறகு நாட்டில் முதன் முறை யாக கர்நாடகத்தில் சாதிவாரி கணக் கெடுப்பு பணி நேற்று தொடங் கியது. வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை 20 நாட்கள் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பை மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.ஆஞ்சநேயா மைசூருவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து 30 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான 1.33 லட்ச‌ம் ஊழியர்கள் கணக் கெடுக்கும் பணியை தொடங்கினர். கர்நாடகத்தில் 1.31 கோடி குடும்பங்களில் வாழும், 6.5 கோடி பேரை சந்தித்து அவர்களது பிறப்பு, கல்வித் தகுதி, வேலை, சாதி உட்பட பல்வேறு விவரங்களை சேகரிப்பார்கள்.

SCROLL FOR NEXT