இந்தியா

காற்று மாசுபாடு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

பிடிஐ

வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் என் னென்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ளது. வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த தகவலோடு, மாநிலங்களில் உள்ள வாகன எண்ணிக்கை குறித்தும் தகவல் அளிக்கும்படி கூறியுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாநிலத் திலும் உள்ள காற்று தர அளவையும், காற்று மாசுபாட்டை குறைக்க தகுந்த யோசனைகளையும் கூற தீர்ப்பாயம் பணித்துள்ளது. டெல்லி யில் 10 ஆண்டுகளாக ஓடிக்கொண் டிருக்கும் டீசல் வாகனங்களுக்கு தீர்ப்பாயம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT