இந்தியா

நாக்பூர் மத்திய சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மத்திய சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பியோடினர். அந்த ஐவர் மீதும் பயங்கர குற்ற வழக்குகள் உள்ளன.

முகமது சோயப் சலீம் காம், பிஷன் சிங் புகே, சதேந்திர குப்தா இவர்கள் மூவர் மீதும் கொலை குற்றச்சாட்டு உள்ளது. ஆகாஷ் தாகூர், பிரேம் நேபாளி இவர்கள் இருவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் இன்று அதிகாலை சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

கைதிகள் தப்பியது குறித்து சிறை நிர்வாகம் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. இருப்பினும் போலீஸ் தரப்பில், "இரும்புக் கம்பிகளை ரம்பம் வைத்து அறுத்து கைதிகள் தப்பியுள்ளனர். கம்பளிகளை பயன்படுத்தி தங்களை மறைத்துக் கொண்டு வெளியேறி இருக்கின்றனர்" என கூறப்பட்டுள்ளது.

ஜெர்மன் பேக்கரி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஹிமாயத் பேக், 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேனன் ஆகியோர் நாக்பூர் மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்து 5 கைதிகள் தப்பியோடியுள்ளது சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT