இந்தியா

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1,731 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

மத்திய சுகாதாரத் துறை அமைச் சகத்தின் கணக்குப்படி, இந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலால் பலியானவர் களின் எண்ணிக்கை 1,731 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 29,938 ஆகவும் உள்ளது.

கடந்த 2009ம் ஆண்டில், இந் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 981 ஆக இருந்தது. 2010ம் ஆண்டு இந்த எண் ணிக்கை முறையே 1,763 ஆகவும், 20,000க்கும் அதிகமாகவும் இருந்தது. இதுவரை குஜராத்தில் தான் அதிகளவில் பன்றிக் காய்ச்சல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 387 ஆகவும், குறைந்த எண்ணிக்கையாக கேரளத்தில் 11 பேரும் இறந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக் காவின் மாசூசெஸ்ட்ஸ் தொழில் நுட்பப் பயிலகத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியாவில் காணப்படும் எச்1என்1 வைரஸின் மரபணு மாறியுள்ளதாகவும் இது அதிக தொற்று இழைகளைக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT