13-வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் ஆந்திர மாநிலத்துக்கு ரூ.385 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ. 150 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திரம், தெலுங்கானா என இரண்டு தனித்தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றில் ஆந்திர மாநிலத்துக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 298.82 கோடி, புள்ளிவிவர அமைப்புகளை அமல்படுத்துவதற்கு ரூ.2.6 கோடி, பிற திட்டங்களுக்காக ரூ.50 கோடி என மொத்தம் ரூ. 384.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவுக்கு ரூ. 149.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.