இந்தியா

பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு

செய்திப்பிரிவு

பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமராக தேர்வு செய்வதற்கான கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார். துவக்க உரையில், மோடியின் பிரச்சாரத்தாலேயே பாஜக அமோக வெற்றி பெற்றதாக புகழ்ந்தார்.

பின்னர், பாஜக நாடாளுமன்றக் குழு தலைவர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிந்தார். முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிய மோடி பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமராகவும், நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். மோடிக்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். மத்தியில் ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார் என தெரிகிறது.

SCROLL FOR NEXT