இந்தியா

எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற ஆளும் கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. அவசர சட்டத்துக்கு பதிலாக சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு, கட்டுப்பாடு) திருத்த மசோதா 2015, மோட்டார் வாகன திருத்த மசோதா 2015, ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் இன்று பரிசீலித்து நிறைவேற்றுவது என பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் நலனை கருதி மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கக்கோரி எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT