ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத் தில் ஏலச்சீட்டு நடத்திபொது மக்களிடம் ரூ.5 கோடி மோசடி செய்து விட்டு தலைமறைவான தம்பதியரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விசாகப்பட்டினம் அக்கய்ய பாளையம் சனத் நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணா தம்பதி, கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பெண்கள் உள் ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மாதத் தவணை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங் களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு சரிவர பணம் பட்டுவாடா செய்யப் படவில்லை. இதனால் சீட்டு எடுத்தவர்கள் பணத்தை கொடுக் கும்படி ராமகிருஷ்ணா தம்பதியரை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவோடு இரவாக வீட்டை காலி செய்துவிட்டு ராமகிருஷ்ணா தம்பதியர் தப்பிச் சென்று விட்டனர். இதை அறிந்த சீட்டுதாரர்கள், நேற்று இதுகுறித்து விசாகப்பட்டினம் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். போலீஸாரின் விசாரணையில் ரூ.5 வரை மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராமகிருஷ்ணா தம்பதியரைத் தேடி வருகின்றனர்.