மக்களவை தேர்தலில் போட்டியிடும் 52 வேட்பாளர்கள் கொண்ட 2-வது வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். பாஜகவில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி எடியூரப்பா, அண்மையில் தான் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
இதேபோல், மற்றுமொரு கர்நாடக முன்னாள் முதல்வரான சதானந்தா கவுடா வடக்கு பெங்களூர் தொகுதியிலும் , கர்நாடக முன்னாள் அமைச்சர் அனந்த குமார் தெற்கு பெங்களூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பத்திரிகையாளர் சந்தன் மித்ராவுக்கு மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்லி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.