கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி ஜும்மா மசூதி அருகே கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய வழக்கில் இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் யாசின் பட்கல் மற்றும் அவரது உதவியாளர் அஸாதுல்லா அக்தர் ஆகியோர் மீது டெல்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2010-ம் ஆண்டு டெல்லி யில் காமன்வெல்த் போட்டிகளில் வெளிநாட்டு அணியினர் பங்கேற் பதைத் தடுக்கும் வகையில், ஜும்மா மசூதி அருகே கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
காமன்வெல்த் போட்டிகளைச் சீர்குலைத்து இந்தியாவின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், தேசத்தை பலவீனப்படுத்துதல் மற்றும் தேசத் துக்கு இடையூறு விளைவித்தல் ஆகியவற்றின் பொருட்டும் இக் குண்டுவெடிப்பை யாசின் பட்கல் மற்றும், அஸாதுல்லா அக்தர் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதத் தலைவர்கள் ரியாஸ் பத்கல் மற்றும் இக்பால் பத்கல் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இக்குண்டுவெடிப்பை யாசின் பட்கல் நிகழ்த்தியுள்ளார் என டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். இக்குற்றப் பத்திரிகையை போலீஸார் கூடுதல் அமர்வு நீதிபதி தயா பிரகாஷ் முன் தாக்கல் செய்தனர்.