இந்தியா

துறைமுகங்கள் தனியார்மயத்துக்கு ஊக்குவிப்பு

செய்திப்பிரிவு

துறைமுகங்கள் தனியார் மயத்தை அரசு ஊக்குவிக்கும் என்று பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

துறைமுகங்கள் அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டும். மேலும், துறைமுகங்களின் பொறுப்பில் ஏராளமான பயன்படுத்தப்படாத நிலங்களும் உள்ளன. இவற்றை பயன்படுத்தி மேம்படுத்தும் வகையிலும் அதிக முதலீட்டை ஈர்க்கும் வகையில் துறைமுகங்கள் தனியார் மயமாவதை அரசு ஊக்குவிக்கும்.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் கட்டுமானம், கட்டமைப்பு, நிறுவுதல் போன்றவற்றுக்கான சலுகைகளுக்கான விலக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT