ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் திமுக தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்மேறையீட்டு மனுவின் விசாரணை 36-வது நாளாக இன்று நடைபெறுகிறது. அரசு தரப்பில் பவானி சிங் 4-ம் நாள் வாதத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திமுக பொது செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் மற்றும் சரவணன் நீதிபதி குமாரசாமியிடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங்கை நீக்ககோரிய எங்களது மனு நிலுவையில் உள்ளது. அந்த மனு 9-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. தற்போது பவானி சிங் இறுதி வாத்தை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டு விட்டால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பயனற்றதாகிவிடும். ஆகவே இந்த வழக்கை 11-ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை ஏற்றுகொன்ட நீதிபதி, ஜெயலலிதா தரப்பு மற்றும் பவானி சிங் தரப்பில் ஒருவாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு திமுக மனுவை ஒரு வாரத்திற்க்கு ஒத்திவைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மனு மீதான விசாரனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.