இந்தியா

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: பிளஸ் டூ மாணவி மீது ஆசிட் வீச்சு பஞ்சாபில் 2 இளைஞர்கள் கைது

செய்திப்பிரிவு

பஞ்சாபில் பிளஸ் டூ மாணவி மீது திராவகம் (ஆசிட்) வீசியது தொடர்பாக, 2 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் கனுவான் நகரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர், நேற்றுமுன்தினம் பொதுத் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந் தார். அப்போது மோட்டார் சைக் கிளில் வந்த 2 பேர், திடீரென மாணவி மீது திராவகத்தை வீசிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மாணவியை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குர்தாஸ்பூர் சிறப்பு போலீஸ் கண்காணிப்பாளர் குர்பிரீத் சிங் தூர், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இந்த தாக்குதலுக்கு பஞ்சாப் கல்வித் துறை அமைச்சர் தல்ஜித் சிங் சீமா கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். மேலும், மாணவி பூரண குணமடைந்த பின், அவருக்குத் தனியாக பிளஸ் டூ தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமிர்தசரஸில் உள்ள பைவாலி கிராமத்தில், 2 இளைஞர்களைப் போலீஸார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திராவக வீச்சில் மாணவிக்கு 60 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மான்பிரீத், அவ ருடைய நண்பர் அஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் பைவாலி கிராமத் தைச் சேர்ந்தவர்கள். மாணவியை மான்பிரீத் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார். அதை ஏற்காததால் அவர் மீது திராவகத்தை வீசியுள்ளனர்’’ என்றனர்.

திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவி, கூடைப் பந்து விளை யாட்டு வீராங்கனை. மாநில அளவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT