ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக சன்பார்மா நிறுவனர் திலிப் ஷாங்வி பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானியை விஞ்சிவிட்டார் ஷாங்வி.
இவரது சொத்துக்கள் மதிப்பு சுமார் 21.5 பில்லியன் டாலர்கள்.
உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் ஷாங்வி 37-வது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி 43-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.