இந்தியா

பிஹாரில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி

ஐஏஎன்எஸ்

பிஹார் மாநிலம் கயா நகரத்தில் பிச்சைக்காரர்களுக்கென்று பிச்சைக்காரர்களே நடத்தும் புதுமையான வங்கி ஒன்று திறக்கப் பட்டுள்ளது. இந்த வங்கியின் பெயர் 'மங்களா வங்கி' ஆகும்.

கயாவில் உள்ள மாதா மங்களா கவுரி கோயிலில் நூற்றுக்கணக் கான பிச்சைக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பணக் கஷ்டம் ஏற்படும்போது உதவி செய்வதற்காக இந்த வங்கி திறக்கப்பட்டுள்ளதாக, அந்த வங்கியின் மேலாளர் ராஜ் குமார் மாஞ்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறு ம்போது, "இந்த வங்கியில் தற்சமயம் 40 பேர் உறுப்பினர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை ரூ.20 டெபாசிட் செய்வோம். அதன் மூலம் வாரத்துக்கு ரூ.800 கிடைக்கும்.

இந்த மாத ஆரம்பத்தில் என் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எனது மகளுக்கும் எனது தங்கைக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களின் சிகிச்சைக்காக இந்த வங்கியில் இருந்து ரூ.8 ஆயிரம் கடன் பெற்றேன். வேறு எந்த வங்கியைப் போலவும் இல்லாது, எந்த ஒரு விண்ணப்பமோ அல்லது அடமானமோ இல்லாமல் உடனடி யாக எனக்குப் பணம் கிடைத்தது. இவ்வாறு பிச்சைக்காரர்களான எங்களுக்கு இந்த வங்கி மிகப் பெரும் உதவியாக இருக்கிறது" என்றார்.

இந்த வங்கியின் செயலாளரான மாலதி தேவி கூறும்போது, "இந்த வங்கி பிச்சைக்காரர்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருக்கும். நாங்கள் ஏழைகளிலேயே மிகவும் ஏழ்மையானவர்களாக இருப்பதால் இந்தச் சமூகம் எங்களைச் சரியாக நடத்துவ தில்லை. இந்த வங்கியில் இன்னும் பல பிச்சைக்காரர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம்" என்றார்.

இவர்கள் இவ்வாறு வங்கி தொடங்குவதற்கு மாநில சமூக நலத்துறை சங்கம் ஊக்குவித்த தாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங் களுக்கு முன்பு இந்த வங்கி செயல் படத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT