காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜக கூட்டணி ஆட்சி சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் சிறை யில் இருந்த பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் விடுவிக் கப்பட்டார். இது மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முதல்வர் முப்தி முகமது சையதின் தன்னிச்சையான முடிவு என்று பாஜக கூறியுள்ளது.
டெல்லியில் நேற்று நடை பெற்ற மத்திய பாதுகாப்புப் படையின் எழுச்சி நாள் விழாவில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் இது தொடர்பாக கூறியது: எங்கள் அரசு தேசியப் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவமும், முன்னுரிமை யும் அளிக்கிறது. மாநிலத்தில் அமையும் கூட்டணி, அங்கு ஆட்சி அமைப்பது என்பதெல்லாம் முக்கியமல்ல.
இந்த விஷயத்தில் காஷ்மீர் மாநில அரசு தரப்பு கூறியுள்ளது திருப்திகரமாக இல்லை.
அவர்களிடம் கூடுதல் விவரங்களை கேட்டுள்ளோம். அதன் பிறகுதான் இது குறித்து முழுமையாக கருத்துக் கூற முடியும். இது தொடர்பாக காஷ்மீர் முதல்வர் என்னிடம் எதுவும் பேசவில்லை, என்றார்.
பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் பிரி வினைவாத தீவிரவாதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளது அக்கட் சிக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.