இந்தியா

மத்திய அரசின் கொள்கைகளால் பொருளாதாரம் உயராது: பிஎம்எஸ் சங்க பொதுச் செயலாளர் கருத்து

ஆர்.ஷபிமுன்னா

பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டில் தொழிற்சாலைகள் பெருகும்; பொருளாதாரம் உயராது என்று பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) விமர்சித்துள்ளது. பிஎம்எஸ் தேசிய பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யா, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சித்து கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியி ருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்றொரு பிரிவான பிஎம்எஸ் சங்கத்தின் இந்த விமர்சனம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுதொடர்பாக விர்ஜேஷ் உபாத்யா ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக எந்த அடிப் படையில் குற்றம் சுமத்தியுள்ளீர்கள்?

குற்றம் சுமத்தும் முயற்சி அல்ல. இவை, இந்த ஆட்சியின் முயற்சிகள், நடவடிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவு. இதில் சாதகம், பாதகம் இரண்டையுமே சுட்டிக் கட்டி யுள்ளோம்.

தொழிற்சாலைகளுக்கான சட்டத்தில் உடல்நல பாதிப்புக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர் நலச் சட்டமே திறனற்று போய் விடும் நிலை உருவாகியுள்ளது.

ராஜஸ்தானின் சுமார் 13,000 தொழிற்சாலைகளில் வெறும் 257 மட்டுமே தொழிற்சாலைகள் சட்ட வரையறைக்குள் அடங்குகின்றன. மகாராஷ்டிரத்தில் 96 சதவீத தொழிற்சாலைகள் அதற்கான சட்டத்திற்குள் வராமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே நிலைதான்.

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவால் ஏற்படும் தாக்கம் காரணமாக வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. தற்போதைய ஆட்சியின் நிலைப்பாட்டால் நாட்டில் தொழிற் சாலைகள் வளருமே தவிர, பொருளாதாரம் வளராது,

மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், முதலாளித்துவத்தை முன்மாதிரி யாக கொண்ட வங்கிகள் அனைத் தும் தோல்வி அடைந்து விட்டதாகக் கூறியுள்ளார். உலக நாடுகளில் தோல்வியுற்ற ஒரு விஷயத்தை நம் அரசும் ஏன் அமல்படுத்த வேண்டும்?

தொழில் சார்பற்ற மாநிலமான மத்தியப் பிரதேசம் இன்று பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. இதை விடுத்து குஜராத், மகாராஷ்டிரம் அல்லது வேறு தொழில் சார்ந்த மாநிலங்களை மட்டும் முன் உதாரணமாக எடுப்பதில் பயன் இல்லை.

பெருநிறுவனங்களுக்கு சாதக மாகவே மத்திய அரசு கொள்கைகளை வகுப்பதாக புகார் கூறியிருப்பது ஏன்?

முன்பு, சில பொருட்களை பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் தடை இருந்தது. இன்று சோப்பு முதல் உப்பு வரையிலான அனைத்துப் பொருட்களை உற்பத்தி செய்ய பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பெரு நிறுவனங்கள் எல்லா தொழிலிலும் நுழைந்தால், சிறுதொழில் நிறு வனங்கள் எதை உற்பத்தி செய்யும்?

‘நிதி ஆயோக்’ உட்பட இன்று மத்திய அரசின் பல்வேறு துறை களில் ஆலோசகர்களாக இருப்ப வர்கள், பெரு நிறுவனங் களின் விசுவாசிகள்தான்.கவுசிக் பாசு, ரகுராம் ராஜன் போன்றவர் கள் உலக நாடுகளில் தோல்வி யுற்ற ஆலோசனைகளை வழங்கு பவர்கள்.

பொருளாதார சீர்திருத்தம், தொழி லாளர் நல சட்ட திருத்தம் உள்ளிட்ட வற்றில் மத்திய அரசு தவறான பாதையில் செல்வதாக புகார் தெரிவித்துள்ளீர்களே?

தொழிலாளர் நல சட்ட திருத்தத்தால் தொழிலாளிகளின் உற்பத்தி என்பது போய் விட்டது. பொதுமக்கள் முன்னேற்றத்திற்கான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. முதலீடுகள் முறையாக பகிர்ந் தளிக்கப்படும் வகையில் அமைக் கப்படவில்லை. பெருநிறு வனங் களின் லாபத்தை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்துதலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி அரசால் நி றைவேற்றப்பட்ட சட்டமே சிறந்தது எனக் கூறுகிறீர்களா?

இதுபோன்ற பிரச்சினைகளில் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒருவகையாகவும், எதிர்கட்சியாகி விட்டால் மற்றொரு வகையிலும் பேசுகின்றனர். நாட்டில் 67 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். அம்மக்களின் நலன் குறித்து யோசிக்க வேண்டும். இதை காங்கிரஸ் கூட்டணி அரசும் செய்யத் தவறி விட்டது.

‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்களே?

இத்திட்டத்தால் சிறுதொழில் மற்றும் குடிசைத் தொழில்களுக்கு என்ன பயன் என்பதை தெளிவு படுத்த வேண்டும். தொழிற்துறை யின் எந்தப்பிரிவில் அந்நிய முதலீட்டாளர்களை அழைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பெருநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங் களின் தயாரிப்புகளால், உள்நாட்டு சிறு, குறு, குடிசைத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT