சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இன்னும் முழுமையான இழப்பீடு வழங்கப் படவில்லை. போலி என்கவுன்ட்டர், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சித்ரவதைகளுக்கு ஆளான அவர் களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நீதி கிடைக்க வில்லை.
நீதிபதி சதாசிவா ஆணையத்தின் பரிந்துரைப்படி உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், குற்றம் இழைத்த சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட மக்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியின்போது கர்நாடக, தமிழக சிறப்பு அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களில் 30-க்கும் மேற்பட்டோர் பெங்களூரு வில் உள்ள 'மக்கள் சக்தி' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதில் சிறப்பு அதிரடி படையினரின் அத்துமீறல்கள் குறித்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் பழங்குடியின பெண் களும், ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்தனர்.
கண்ணீர் கதை
மேட்டூர் அருகே உள்ள பெரிய தண்டா கிராமத்தைச் சேர்ந்த பாப்பா பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு அதிரடிப்படையினர் 8 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்று 'வீரப்பன் கூட்டாளிகள்' எனக்கூறி போலி என்கவுன்ட்டர் செய்தனர். அதில் என் கணவரும் ஒருவர்.
என் கணவரைப் போல போலி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப் பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி சதாசிவா கமிஷன் உத்தரவிட்டது.
கர்நாடக அரசு ரூ.5 லட்சம் மட்டுமே எனக்கு இடைக்கால நிவாரணமாக வழங் கியது. மீதித் தொகையை உடனடியாக வழங்கினால் மீதி இருக்கும் வாழ்க்கையை உயிரோடு கழிப்பேன்” என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வர்களின் குடும்பத்தினர் ஒவ்வொரு வரும் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு களைக் கூறினர்.
நீதி வேண்டும்
இறுதியாக மக்கள் சக்தி அமைப்பின் செயல் தலைவர் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன் பேசும்போது, “சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர் மேட்டூர், சத்தியமங்கலம், மாதேஷ்வரன் மலை, கொள்ளேகால் உள்ளிட்ட இடங்களைச் சுற்றி யுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகளுக்கு இழைத்த அநீதியை வார்த்தையில் வடிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களும், பெண்களும் இன்று வரை அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை.
மனித உரிமை செயற்பாட்டாளர் களின் தொடர் போராட்டங்களின் காரணமாக நீதிபதி சதாசிவா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் அதிரடிப் படையினரின் அத்துமீறல்களை விசாரித்து பாதிக்கப்பட்ட 48 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு வழங்க இரு மாநில அரசுகளும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தன. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் அப்பாவி மக்களுக்கு இன்னும் முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை.
50 சதவீதத்துக்கும் குறைவான வர்களுக்கு மட்டுமே ரூ.2.5 கோடி இடைக்கால இழப்பீடாக வழங் கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7.5 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
பழங்குடியின மக்களுக்கு உரிய நீதி கிடைக்க மத்திய மாநில அரசுகள் புதிய விசாரணை ஆணையத்தை நியமிக்க வேண்டும்.
அந்த ஆணையம் தவறு இழைத்த சிறப்பு அதிரடிப் படையினருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.