உத்தரப்பிரதேச மாநிலம் மெயின் புரி மாவட்டத்தில் கபூர்புரால கிராமம் உள்ளது. இங்கு கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பகுதி யைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரை மானப்பங்கப்படுத்தி, தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த புகாரை விசாரித்த கபூர்புரா கிராம பஞ்சாயத்து, தவறு செய்த இளைஞரை, அந்த இளைஞரின் தந்தை 50 முறை செருப்பால் அடிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித் தது. இந்த தண்டனை கிராமவா சிகள் முன்னிலையில் நிறைவேற் றப்பட்டது.
முன்னதாக, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோது அங்கிருந்த போலீஸார் பிரச்சினையைப் பேசித் தீர்க்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மெயின்புரி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் காந்த் சிங் கூறும்போது, “இப்பிரச்சினை தொடர்பாக விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்த இளைஞர், பஞ்சாயத் தார், புகாரை பதிவு செய்ய மறுத்த போலீஸார் அனைவர் மீதும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.