நாகாலாந்து மாநிலத்தில் சிறைக் கைதி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் நேற்று தெரிவித்தார்.
தலைநகர் கோஹிமாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஜெலியாங் தெரிவித்தார்.
நாகாலாந்தில் உள்ள திமாப்பூரில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சையது பரீத் கானை கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
அடுத்த நாள் திமாப்பூர் மத்திய சிறையில் கான் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் சிறைக்குள் புகுந்து அங்கிருந்த சையது பரீட் கானை வெளியில் இழுத்துவந்து, நிர்வாண மாக்கி அடித்துக் கொன்றது.
கைதி அடித்துக் கொல்லப் பட்டது தொடர்பாக திமாப்பூர் போலீஸார் இதுவரை 55 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 34 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களைத் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாபூரில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்னகிரியில் உள்ள அணு மின் கழக அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா கட்சித் தொண்டர்கள்.