நிலக்கரி சுரங்க மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ள சில எதிர்க்கட்சிகள் தடம் மாறி அரசு பக்கம் முழுமையாக சாய்ந்து விட்டன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதே கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது, மசோதாவுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே என்ன நடந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றார்.
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிராக அண்மையில் 14 கட்சிகள் கைகோத்த நிலையில் எதிர்க்கட்சி களிடையே இப்போது பிளவு ஏற்பட்டுள்ளது.