தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் தொகுதியில் இருந்து இந்திர கிரண் ரெட்டி, சிர்பூர் தொகுதியில் இருந்து கோனேரு கோணப்பா ஆகிய இருவரும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த வாரம் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் மதுசூதனாச்சாரி நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “இவ்விரு எம்எல்ஏக்களும் இனி டி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.