மத்திய அரசு மற்றும் டெல்லி நீதிமன்றம் தடை விதித்திருந்தும், ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை நேற்று முன் தினம் இரவு இங்கிலாந்தில் பிபிசி ஒளிபரப்பியது. இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா வில், நிர்பயாவின் தந்தை நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
எங்கள் மகள் நிர்பயா டெல்லி யில் பலாத்காரம் செய்யப்பட்டதில் இறந்தார். அவரது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ பகிரங்கமாக வெளியிடக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டது. எனினும், ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தில் எங்கள் மகளின் பெயரையும், படத்தையும் வெளி யிட்டுள்ளனர். இது சரியல்ல. இதை எதிர்த்து வழக்கு தொடுப்போம்.
ஆவணப்படத்தை வெளியிட்ட தின் மூலம், இந்திய அரசுக்கு பிபிசி சவால் விடுத்துள்ளது. அவர் களுக்குத் தகுந்த பதிலடியை அரசு கொடுக்கும் என்று நம்புகிறோம். இந்தப் பிரச்சினையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்து செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பலாத்கார குற்றவாளிகளின் மரண தண்டனை மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலை யில், பெண்களைப் பற்றி இழி வாக கூறியுள்ள முகேஷ் சிங், மற்ற குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு நிர்பயாவின் தந்தை கூறினார்.
ஆவணப்படத்தில், பலாத் கார குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டியும் இடம்பெற்றது. திஹார் சிறையில் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் பெண்களைப் பற்றி மிக இழிவாகக் கூறியிருந்தார் முகேஷ் சிங். அதற்கு நிர்பயாவின் தந்தை ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
எனினும் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சித்தரித்துள்ள இந்த ஆவணப்படத்தை ஒவ்வொரு வரும் பார்க்க வேண்டும். பெண் களுக்கு எதிராக பேட்டி கொடுத் துள்ள முகேஷ் சிங்கை வெளியில் விட்டால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என்றார்.