ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடனான கருத்து வேறுபாடுகள் பேசி களையப்படும் என ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லியில் அவர் கூறியதாவது: பிஹாரில் புதிய அரசு அமையும். அந்த அரசு ஐக்கிய ஜனதா தள அரசாகவே இருக்கும். பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் எங்கள் கட்சி யின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படு வார். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டி ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுடனான கருத்து வேறுபாடுகள் பேசி களையப்படும் என்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளனர்.