இந்தியா

காவிரியில் அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் இன்று ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கர்நாடகா அரசு காவிரியில் அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபடுகின்றன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிதாக 2 அணை கள் மற்றும் நீர் மின் நிலையம் அமைக்க கர்நாடக அரசு முடி வெடுத்துள்ளது. இதனை கண்டித் தும் காவிரி மேலாண்மை வாரி யத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் தமிழக விவசாய அமைப்புகளின் சார்பாக இன்று தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும்,கன்னட கூட்ட‌மைப்பின் ஒருங்கிணைப் பாளருமான வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கூறியதாவது:

மேகேதாட்டுவில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் இருக் கிறது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு நீர் விட‌ப்படுகிறது. இருப்பினும் தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அடிக்கடி கர்நாடகத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தை அணுகினாலும் நிறுத்த‌ முடியாது. தமிழகத்தில் முழு அடைப்பு நடத்து வதால் கர்நாடகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்த உண்மை தெரிந்தும் தமிழக அரசி யல் கட்சிகள் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்துகிறார்கள்.

எனவே தமிழகத்தில் போராட் டம் நடைபெறும் அதே நாளில் (இன்று) அவர்களை கண்டித்து பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்பேட்டை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

பெங்களூருவில் எனது தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவ பொம்மை கள் எரிக்கப்படும். எங்களது போராட்டத்திற்கு ஆதரவாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங் களை திரையிடக்கூடாது'' என எச்சரிக்கை விடுத்தார்.

புதிய அணைகள் கட்டுவது உறுதி

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகை யில்,''காவிரி நடுவர் மன்ற தீர்ப் புப்படி தமிழகத்திற்கு உரிய 192 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். கர்நாடகா வுக்கு ஒதுக்கப்பட்ட நீரைக் கொண்டு மேகேதாட்டுவில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற இருக் கிறோம். இதனை தமிழகம் எதிர்ப் பது சட்டத்துக்கு எதிரானது. இனி யும் தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது பயன்படாது. எனவே காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிதாக அணைகள் கட்டப்படுவது உறுதி'' என்றார்.

SCROLL FOR NEXT