டெல்லியில் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் கலவரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சீக்கியர் கலவரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்புள்ளது. அவர்களை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காப்பாற்ற முயற்சி செய்கிறார். இது மனித உரிமை மீறலாகும் என்று குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் திருத்தியமைக்கப்பட்ட மனுவை சீக்கிய அமைப்பு தாக்கல் செய்தது.
மொத்தம் 38 பக்கங்களைக் கொண்ட அந்த மனுவில், சோனியா காந்தி உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே சீக்கியர் கலவரத்தில் தொடர்புடைய கட்சித் தலைவர்களை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றி வருகிறார். அவரிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் சீக்கிய அமைப்பு கோரியிருந்தது.
கடந்த 1984-ம் ஆண்டு டெல்லியில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கு திங்கள் கிழமை மாலை அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் குறித்த வழக்கு இன்று அமெரிக்க நீதி மன்றத்தில் விசாரணைக்காக வந்தது. இந்த வழக்கை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அன்னிய மண்ணில் நடந்த சம்பவம் என்பதால், இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று அமெரிக்க நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.