இந்தியா

மன்மோகனுக்கு சம்மன் அனுப்பியது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிடிஐ

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்பியிருப்பது பாஜக தலைமையிலான மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிதித் துறை வல்லுநராகவும் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தவர் மன்மோகன் சிங். நேர்மையான மனிதர்களில் ஒருவரான மன்மோகன் சிங் உலக நாடுகளால் மதிக்கப்படுபவர்.

இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இதை வன்மையாகக் கண்டிக் கிறோம். முன்னாள் பிரதமருக்கு சம்மன் அனுப்பியிருப்பதன் மூலம் சர்வதேச அரங்கில் நம் நாட்டின் மீதான புகழ் பாதிக்கப்படும்.

எனவேதான், அவருக்கு ஆதர வான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. இந்தப் பிரச்சி னையை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள நாங்கள் போராடுவோம்.

கூட்டணி அரசு நிலைக்காது

மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் இணைந்து மாநிலத்தில் கூட்டணி அரசை அமைத்துள்ளன. இவ்விரு கட்சிகளின் அடிப்ப டைக் கொள்கைகளும் வெவ்வேறா னவை. இந்த அரசின் மூலம் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக் காது. மாறாக அரசியல் ஆதாயம் தேடவே இது பயன்படும். எனவே, இந்தக் கூட்டணி அரசு முழு பதவிக்காலம் வரை நீடிக்காது.

பல ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஒரு குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரையை பரிசீலித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT