இந்தியா

சபாநாயகரை விமர்சித்ததால் காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளி

ஐஏஎன்எஸ்

காஷ்மீர் சபாநாயகரை 'இந்து அடிப்படைவாதி' என விமர்சனம் செய்ததையடுத்து நேற்று சட்டப் பேரவையில் அமளி ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் நேற்று வழக்கம்போல சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஜாவைத் ரைனா, சபாநாயகரை 'இந்து அடிப்படை வாதி' என விமர்சித்ததாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சபாநாயகரின் மேடை அருகில் வந்து கூச்சலிட்டனர்.

அவர்களுக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சியினரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பின்னர் கேள்வி நேரத்தின்போது, சுயேட்சைத் தலைவர் இன்ஜினீயர் ரஷீத், 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் பொருட்களை காஷ்மீரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி, சபாநாயகரின் மேடை அருகே சென்றார். அவரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

SCROLL FOR NEXT