ஆந்திர மாநிலம் நெல்லூரில் நேற்று வெங்கய்ய நாயுடு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப் போது நிருபர்களிடம் அவர் கூறிய தாவது: மத்திய நகர வளர்ச்சித் துறையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 1000 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் குறித்த நிதி திட்ட அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதற்கான நிதி ஒதுக்கப்படும். ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும். ஆனால் மாநில பிரிவினை சட்டத்தில் எங்கும் சிறப்பு அந்தஸ்து குறித்து இல்லை.
மத்திய அரசை தோழமை கட்சியான தெலுங்கு தேசம் பகிரங்கமாக விமர்சிப்பது முறையல்ல. தேவைப்பட்டால் கட்சியின் பிரதிநிதிகள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். போலாவரம் அணை கட்டும் திட்டத்துக்கு மேலும் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.