இந்தியா

நிர்பயா குறித்த ஆவணப்பட விவகாரம்: பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ்

பிடிஐ

நிர்பயா குறித்த ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்பட விவகாரத்தில் நிபந்தனைகள் மீறப்பட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்துவதற்கு உரிய அனுமதியை பிபிசி பெறவில்லை. ஆனால் அதை மீறி வர்த்தக நோக்கத்தில், திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு வெளியிட்டது. இதை வெளியிடுவதற்கு முன்னதாக பிபிசிக்கு நேற்று முன்தினம் இரவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிபிசி அளிக்கும் பதிலுக்காக காத்திருக்கிறோம். பதில் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த நோட்டீஸை திஹார் சிறை இயக்குநர் ஜெனரல் அலோக் குமார் வர்மா, அரசு வழக்கறிஞர் மூலம் வழங்கி உள்ளார்.

SCROLL FOR NEXT