இந்தியா

ரேணிகுண்டாவில் விமான சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலை யத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நேற்று போக்கு வரத்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டது.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் ரேணிகுண்டா விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக நேற்று விமான சர்வீஸ்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டி வந்தது. ரேணிகுண்டாவுக்கு வந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

ரேணிகுண்டாவிலிருந்து எந்த விமானமும் வெளி ஊர்களுக்கு செல்லவில்லை. இதனால் விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT