ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பலி 397 ஆக அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜஸ்தானில் 6,308 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 397 பேர் பலியாகியுள்ளனர், என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 77 பேர் பலியாகியுள்ளமர். ஆஜ்மீரில் 33, நாக்பூரில் 30, பார்மரில் 23, கோட்டாவில் 18, சிட்டோகரில் 12, சிகார், பாலியில் தலா 12, டோங்கில் 11, பில்வாராவில் 10 என மொத்தம் 397 பேர் பலியாகினர்.