நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை நேற்று மக்களவையில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்தார்.
ஒருகாலத்தில் ஹெச்எம்டி கைக்கடிகாரத் தில் புகழ்பெற்று விளங்கிய ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் நிறுவனம் தற்போது நலிவடைந்துவிட்டது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமான 3 ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளதாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் தெரிவித்தார். ஏர் இந்தியா, எம்டிஎன்எல், ஹிந்துஸ்தான் ஷிப் யார்ட் நிறுவனங்களும் மூடப்படவுள்ளன.
நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியலில் மொத்தம் 65 உள்ளன. மூடப்படும் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) அறிவிக்கப் பட்டு உரிய ஈட்டுத் தொகை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நலிவடைந்த நிறுவனங்களின் தன்மையை ஆராய்ந்து, மீண்டும் செயல்படச் செய்வதற் கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. இதன் பிறகும் செயல்படாத நிறுவனங்களை அரசின் ஒப்புதலோடு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.