இந்தியா

ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

எஸ்.புவனேஸ்வரி

பெங்களூரில் அண்மையில் மர்மமான முறையில் இறந்துபோன ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவியின் தாயார் கவுரம்மா இன்று காலை தும்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உறவினர் ஒருவர் கூறும்போது, "கடந்த மூன்று நாட்களாக கவுரம்மா எதுவும் சாப்பிடவில்லை. இதனால், அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்" என்றார்.

முன்னதாக கடந்த புதன்கிழமையன்று கவுரம்மாவும் அவரது கணவர் கரியப்பாவும் கர்நாடக சட்டப்பேரவை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது மகனின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT