இந்தியா

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் உள்ள எல்லை சாவடிகள் மீது பாகிஸ்தான் வீரர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எப்) அதிகாரி நேற்று கூறும்போது, “ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சனிக்கிழமை இரவு 4 முதல் 5 தடவை துப்பாக்கியால் சுட்டனர். அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள பிஎஸ்எப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை. இந்த சம்பவத்தில் நமது தரப்பில் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை” என்றார். -பிடிஐ

SCROLL FOR NEXT