இந்தியா

கொல்கத்தா மருத்துவமனையில் 6 நாட்களில் 16 பச்சிளங் குழந்தைகள் பலி

பிடிஐ

கொல்கத்தா பி.சி.ராய் மெமோரியல் மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 16 பச்சிளங் குழந்தைகள் பலியானது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேசிய மாநில சுகாதார துறை சேர்மன் டிரிடிப் பானர்ஜி, "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பி.சி.ராய் மருத்துவமனையில் 3 பச்சிளங் குழந்தைகள் இறந்துள்ளன.

கடந்த 6 6 நாட்களில் 16 பச்சிளங் குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் அனைத்து மிகவும் மோசமான உடல் நிலையுடன் கடைசி நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

அதன் காரணமாகவே மருத்துவர்களால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை" எனக் கூறினார்.

SCROLL FOR NEXT