இந்தியா

அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைத்தபோது கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா திடீர் வெளிநடப்பு

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாஜு பாய் வாலா (77) கடந்த ஆண்டு கர்நாடக ஆளுநராக நியமிக்கப் பட்டார். அரசு நிகழ்ச்சிகளில் கன்னடத்தை புறக்கணித்த‌து, பள்ளி களில் இந்து சமயப் புராணங்களை கட்டாயம் போதிக்க வேண்டும் எனக் கூறியது, சட்டப் பேரவையில் இந்தியில் உரையாற்றிய‌து உள் ளிட்ட விவகாரங்களில் வாஜுபாய் வாலா சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ராகவேந்திர சிங் சவுகான் சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அவரது பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, தலைமை செயலர் கவுஷிக் முகர்ஜி உள்ளிட்ட பல‌ர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் வஜுபாய் வாலா, நீதிபதி ராகவேந்திர சிங் சவுகானுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆளுநர் வாஜுபாய் வாலா தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தபோதே திடீரென மேடையில் இருந்து இறங்கி வெளியே நடந்து சென்றார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து ஆளுநரின் உதவியாளர் யோகராஜ் ஓடிச் சென்று அவரிடம், ‘தேசிய கீதம் ஒலித்து கொண்டிருக்கிறது' என கூறினார்.

இதனைத் தொடர்ந்து வாஜு பாய் வாலா வேகமாக மேடைக்கு மீண்டும் வந்தார். ஆனால் அதற்குள் தேசிய கீதம் முடிவ டைந்தது. இந்த சம்பவம் கன்னட தொலைக்காட்சிகளில் நேரலை யாக ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன பூஜாரி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாராசாமி உள்ளிட்ட பலர் ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT