இந்தியா

பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து நஜ்மா, ஹேமமாலினி, இரானி நீக்கம்: புதிய உறுப்பினராக சுப்பிரமணியன் சுவாமி சேர்ப்பு

செய்திப்பிரிவு

பாஜக தேசிய செயற்குழு நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. செயற்குழுவிலிருந்து நஜ்மா ஹெப்துல்லா, நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி, ஸ்மிருதி இரானி ஆகி யோர் நீக்கப்பட்டனர்.

மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயற்குழுவில் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட் டுள்ளார்.

கட்சியின் முக்கிய அமைப்பு களில் தேசிய செயற்குழுவும் ஒன்று. இதில் புதிதாக மத்திய அமைச்சர்களான சுரேஷ் பிரபு, விரேந்திர சிங் சேர்க்கப் பட்டனர். செயற்குழுவிலிருந்து மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ஸ்மிருதி இரானி மற்றும் நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி ஆகியோர் நீக்கப்பட்டனர்.

பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இந்த மாறுதலை செய்துள்ளார்.

கட்சியின் மூத்த தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.

புதிய உறுப்பினர்களாக அமைச்சர்கள் வி.கே.சிங், ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த செயற்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் பெங்களூருவில் கூடும் என தெரிகிறது.

திரைப்பட பின்னணி பாடகர் பபூல்சுப்ரியோ, எம்.பி. கிரண் கேர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக சேர்க்கப்பட் டுள்ளனர்.

SCROLL FOR NEXT