இந்தியா

காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மீது மோசடி வழக்கு

செய்திப்பிரிவு

தேர்தலில் போட்டியிட சீட் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் போட்டியிட இடம் தருவதாகக் கூறி கலாவதி என்பவரிடம் ரூ.ஒரு கோடியே 75 லட்சம் லஞ்சம் பெற்றதாக ரேணுகா சவுத்ரி மீது புகார் எழுந்தது.

மோசடி புகார் எழுந்ததைத் தொடர்ந்து ஹைதராபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ரேணுகா சவுத்ரி மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ரேணுகா சவுத்ரி மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT