நிலத்தடி நீர் முறைப்படுத்துதல் தொடர்பான மாதிரி சட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் இதுவரை 15 மாநிலங்கள் மட்டுமே தங்களுக்கென்று தனியான நிலத்தடி நீர் சட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்நிலையில், மத்திய நிலத்தடி நீர் வாரியத் தலைவர் கே.பி.பிஸ்வாஸ் கூறியதாவது:
நீர் என்பது மாநிலங்களின் அதி காரத்துக்கு உட்பட்டது. மாநிலங்கள் தங்களுக்கான தனியான விதிமுறை கள், சட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இது வரை 15 மாநிலங்கள் மட்டுமே அப் படியான சட்டத்தை இயற்றியிருக் கின்றன.
இதுவரை சட்டம் இயற்றாத மாநிலங்களுக்கு மிக விரைவில் சட்டத்தை உருவாக்கும்படி கடந்த மாதம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இன்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்தச் சட்டம் தொடர்பான ஒரு மாதிரி சட்டத்தை ஏற்கெனவே மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியிருந்தது. மாநிலங்கள் தங்களுக்கான ஒரு சட்டத்தை வைத்திருக்கும்போது, மாநில நிலத்தடி நீர் ஆணையம் ஒன்று உருவாக்கப்படும். அதன் மூலம் தகுந்த இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.