இந்தியா

தூய்மை இந்தியா திட்டம் பெரும் இயக்கமாக திகழ்கிறது: அருண் ஜேட்லி

ஐஏஎன்எஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சியால் தூய்மை இந்தியா திட்டம் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "தூய்மையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சி வெற்றி கண்டு வருகிறது,

ஆட்சிக்கு வந்த குறைந்த காலத்தில் மூன்று முக்கிய திட்டங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. அதில், முக்கியமானது 'தூய்மை இந்தியா' திட்டம் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT