இந்தியா

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.ஆர். பாட்டீல் காலமானார்

பிடிஐ

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஆர்.பாட்டீல் (58) மும்பையில் நேற்று காலமானார்.

புற்று நோய் காரணமாக 2 மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக ஆர்.ஆர். பாட்டீல் பணியாற்றினார்.

‘அவரது மறைவு மகாராஷ்டிர மாநிலத்துக்கு பேரிழப்பு’ என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT