இந்தியா

ஆம் ஆத்மிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீர் ஆதரவு

பிடிஐ

டெல்லியின் வளர்ச்சிக்காக மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஆம் ஆத்மி கட்சிக்கு திடீர் அதரவு அளித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இது குறித்து கூறும்போது, "டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 7ஆம் தேதி நடக்க இருக்கிறது. டெல்லி மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் தற்போதைய தேவைக்கும் டெல்லியின் வளர்ச்சிக்காகவும் டெல்லி மக்கள் இதனை செய்ய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT