சிவசேனை மூத்த தலை வரும், எம்.பி.யுமான ஜி.கிருத் திகர் கூறியது: ரயில்வே பட்ஜெட் எங்களுக்கு கடும் அதிருப் தியை அளித்துள்ளது. பட்ஜெட் டில் பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன. அவற்றையெல் லாம் நிறைவேற்ற பணம் எங்கிருந்து வரும் என்பது கூறப் படவில்லை. அனைவரையும் இருளுக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்டாக உள்ளது.
மற்றொரு சிவசேனா எம்.பி. சந்திரகாந்த் கருத்து கூறும்போது ‘‘இது நல்ல பட்ஜெட் போல தோன்றுகிறது. ஆனால் புரிந்து கொள்ள கடினமானது. ரயில்வே பட்ஜெட் அறிவிப்பு என்றால் தங்கள் பகுதிக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது என்றுதான் எங்களிடம் (எம்.பி.க்களிடம்) மக்கள் முதலில் கேட்பார்கள்’’ என்று கூறினார்.
சுரேஷ் பிரபு ரயில்வே அமைச் சராவதற்கு முன்பு சிவசேனை கட்சி எம்.பி.யாக இருந்தவர் என் பது குறிப்பிடத்தக்கது.