இந்தியா

ஆதார் திட்டத்தில் மத்திய அரசின் நிலை என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியின்போது ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஒரே வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆதார் திட்டத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காஸ் மானியத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT