இந்தியா

நான் தவறு செய்திருந்தால் தண்டிக்கலாம்: ஹவாலா புகார் குறித்து கேஜ்ரிவால் கருத்து

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வர்கள் ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாக பாஜகவினர் புகார் கூறியுள்ள நிலையில், தன் மீதான புகார் குறித்த விசாரணைக்கு தயார் என்றும் தவறு செய்திருந் தால் தண்டிக்கலாம் என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித் துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலதிபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி ஆம் ஆத்மி கட்சி அரசியல் களத்தில் நுழைந்தது. ஆனால் அந்தக் கட்சி நிதி திரட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இப்போது புகார் எழுந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்று கூடி ஆம் ஆத்மி தன்னார்வ செயல்பாட்டுக் குழுவை (ஏவிஏஎம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவினர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவில் போலியான 4 நிறுவனங்களின் பெயரில் ரூ.50 லட்சம் நிதி திரட்டியதாகவும் அந்தப் பணம் சட்டவிரோதமானது என்றும் இந்த அமைப்பினர் புகார் கூறியுள் ளனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கடந்த ஆண்டு மே மாதம் வெளியேறி, சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த ஷாஜியா இல்மி கூறும்போது, “ஆம் ஆத்மியின் ஊழலை நள்ளிரவு ஹவாலா என்றே அழைக்கலாம்” என்றார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:

கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடைகள் அனைத்தும் காசோலை மூலமாகவே பெறப் பட்டுள்ளன. காசோலை பணமான பிறகு நன்கொடையாளர்களின் பட்டியல் எங்களது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நள்ளிரவில் நிதி வசூலித்த தாக கூறப்படும் புகார் தவறானது.

மேலும் எங்களுக்கு வழங்கப் பட்ட நிதி சட்டவிரோதமானது என கூறப்படுகிறது. எங்களுக்கு நிதி வழங்கிய நிறுவனங்கள் சட்டத் துக்குப் புறம்பாக பணம் சம்பாதித் திருந்தால் அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த விஷயத்தில் விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். என் மீது தவறு இருப்பது நிரூபிக்கப் பட்டால் தண்டனை வழங்கலாம்.

பாஜகவினர் ஆம் ஆத்மியைக் கண்டு அச்சமடைந்துள்ளனர். அதனால்தான் கட்சியின் மூத்த தலைவர்களை தேர்தல் பிரச்சாரத் தில் களமிறக்கி உள்ளனர். அத்துடன் என் மீதும் என் குடும்பத் தினர் மற்றும் இனத்தின் மீதும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவினர் விரக்தி அடைந்திருப்பதையே இது பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT