இந்தியா

மஹாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சல் பலி 78 ஆக அதிகரிப்பு

ஷோமொஜித் பானர்ஜி

மஹராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 20பேர் உயரிழந்துள்ளனர்.

அபாயகரமான ஹெச்1என்1 வைரஸ் தாக்குதலால் உருவாகும் பன்றிக்காய்ச்சல் மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக 20 பேரை பலிவாங்கியுள்ளது. இதனால் அங்கு பன்றிக் காய்ச்சலால் நேர்ந்த உயிரிழப்பு 78 ஆனது. மாநிலத்தின் மருத்துவமனை வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தில் மிகவும் மோசமான பாதிப்பு நேர்ந்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நாக்பூரில் ஆறு மணி நேரத்தில் மூன்றுபேர் இறந்துள்ளனர். தொடர்ந்து மேலும் இருவர் இறந்துள்ளனர். இந்நோய் மேலும் பரவாமல் இருக்க மருத்துவமனைகளில் உள்ள அவசரநிலைப் பிரிவுகளில் மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பன்றிக் காய்ச்சலால் மட்டும நாக்பூரில் இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்தே 300க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு என்று சந்தேகிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாளில் மட்டும் 100 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் மாநில மருத்துவ அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

வடக்கு மஹாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துள்ளது. நாசிக் மாவட்டத்தில் 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி தென்பட்ட 4000த்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிம்ப்ரி-சின்ச்சிவாத் பகுதியில் உயிரிழப்பு 24 என பதிவாகியுள்ளதன்மூலம் புனே மாவட்டத்திலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வது மேலும் தொடர்வதால் மாநிலத்தின் மருத்துவமனை வட்டாரங்கள் எச்சரிக்கை செய்துவருகின்றன.

ஜனவரியிலிருந்தே 500க்கும் அதிகமானவர்கள் பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டதாகவும் பிப்ரவரியின் முன்பாதியில் இது தீவிரமடைந்து வருவதாகவும் மஹாராஷ்டிர மருத்துவமனைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT